இன்றைய சிறுவர்களை நாளைய தலைவர்கள் ஆக்கும் மிகச் சிறந்த நிறுவனம் பாடசாலை ஆகும்.
கமு/கமு/பாண்டிருப்பு மகா வித்தியாலயமானது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கரையோரப் பிரசேங்களில் ஒன்றான அம்பாறை மாவட்டத்தில் கல்முனைக் கல்வி வலயத்தில் பாண்டிருப்பு என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. அருகே ஸ்ரீ மாணிக்கம் பிள்ளையார் கோயிலும், நூலகம், குளக்கரைகள், வயல்கள் என்ற சுற்றுப் புறச் சூழலை இயற்கையோடு கொண்டமைந்த இந்தப் பாடசாலை. பாண்டிருப்பு கிராமத்தின் மக்களின் அறிவுப்பசியை போக்கும் வகையில் உருவாக்கப்பட்ட பாடசாலை.
பயனுள்ள கல்வியிலும் பண்புள்ள மானுட விழுமியங்களாலும் உருவாகும் மாணவர் சமூகம்
நவீன யுகத்தின் சவால்ளை வெல்லக் கூடிய மானுடத்தை உருவாக்கும் ஆளுமை நிறைந்த நற்பிரஜைகள்.