இன்றைய சிறுவர்களை நாளைய தலைவர்கள் ஆக்கும் மிகச் சிறந்த நிறுவனம் பாடசாலை ஆகும்.
வரலாறு
கிழக்கே வங்க கடலாலும்இ மேற்கே வயல் வெளிகளாலும்இ வடக்குஃதெற்கே ஊர் மனைகளாலும் சூழற்ப்பட்ட அழகிய இயற்கை அமைப்பைக் கொண்ட பாண்டிருப்பு கிராமத்தின் மக்களின் அறிவுப் பசியை போக்கும் வகையில் ஓர் பாடசாலை தேவை என உணரப்பட்டமையினால் அப்போதைய திரு.மா.கு.சதாசிவக்குருக்கள்இ திரு.கோ.சாமித்தம்பி ஐயாஇ திரு.மு.கோவிந்தன் ஐயா ஆகியோர் தமது உழைப்புஇ பணம்இ பொதுநலசிந்தனைஇ நேரம் என்பவற்றை செலவிட்டு ஊரின் மத்தியில் ஓர் வளவில் ஓலைகொட்டிலை அமைத்து ஓர் பாடசாலையை உருவாக்கினர். இதன் முதல் அதிபராக திரு.N.செல்வநாயகம் ஐயா அவர்கள் கடமையாற்றினார். இதன் முதல் மாணவனாகக் திரு.ளு.பாக்கியநாதன் (முன்னாள் அதிபர்இ வலயக்கல்விப்பளிப்பாளர்) இணைந்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பின்னர் அப்பாடசாலையானது இடவசதி போதாமையினாலும்இ மாணவர் தொகை அதிகரித்ததாலும் இப் பாடசாலையானது கைவிடப்பட்டு அதே காலப்பகுதியில் 1942ல் வண.மாணிக்கக்குருக்கள்இ சதாசிவக்குருக்கள் ஆகியோரின் முயற்சியினால் பிரதான வீதியில் உள்ள வாள் மாத்தும் சந்திக்கு அண்மையில் அமைந்துள்ள திரௌபதை அம்மன் ஆலய வளவில் சுவருடன் கூடிய ஒலைகளால் அமைக்கப்பட்ட ஓர் கட்டிடத்தில் பாடசாலையை உருவாக்கினார். இப்பாடசாலையானது 12.12.1943ல் திரு.வு.சிவஞானம் என்பவரது முயற்சியினால் அப்போதைய கல்வி அமைச்சரான திரு.ஊ.ற.ற.கன்னங்கரா அவர்களால் திறந்துவைக்கப்பட்டு அரச பாடசாலையாக்கப்பட்டது. அப்போது இது அரசினர் தழிழ் கலவன் பாடசாலை எனப்பட்டது. இதில் 1-5 வரையான வகுப்புக்களே காணப்பட்டன.
பின்னர் 01.11.1946ல் உத்தியோக பூர்வமாக பதியப்பட்ட முதல் அதிபராக திரு.N.செல்வநாயகம் அவர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இப்பாடசாலையில் திரு.மா.சதாசிவக்குருக்கள்இ திரு.வை.ராமக்குட்டிஇ திரு.வ.இரத்தினசிங்கம்இ திரு.ச.சாமித்தம்பி ஆகியோர் ஆசிரியர்களாகக் கடமையாற்றினர். அதன் பின்னர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரும் பாடசாலையின் முதல் பெண் அதிபராக திருமதி.ளு.ஆறுமுகம் என்பவர் 04.03.1947 அதிபராக கடமையேற்றுப் பணியாற்றினார். அதன் பின்னர் பாடசாலையின் மாணவர் தொகையும் அதிகரித்ததாலும் இடவசதி போதாமையினாலும் பாடசாலையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டிய தேவை உணர்ந்தவர்கள் பொருத்தமான இடத்தை தேடிய போது தற்போது பாடசாலை இருக்கும் காணியை மனமுகந்து இலவசமாக பாடசாலைக்கான 2 ஏக்கர் காணியை வழங்கியப் பெருமை திரு.கந்தையா அவர்களையே சாரும். 1.10.1947ல் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்துக்கு அண்மையிலுள்ள இக்காணியில் புதிய பாடசாலை கட்டிடம் ஒன்றை பாடசாலையின் 3வது அதிபராக திரு.ம.இளையதம்பி அவர்கள் 01.10.1947 கடமையையேற்றுக் கொண்டதுடன் பாடசாலையின் வரலாற்றில் அதிககாலம் சுமார் 18ஆண்டுகள் கடமையாற்றியதுடன் இவரது காலத்திலேயே அப்போதைய பாராளமன்ற உறுப்பினரான திரு.ளு.எதிர்மன்னசிங்கம் அவர்களின் உதவியுடனும் அதிபரும்இ ஊர்பிரமுவர்களும் இணைந்து ஆரம்ப கட்டிடம் ஒன்றை அமைத்தனர்.
பின்னர் அதிபர் திரு.ம.இளையதம்பி அவர்களின் தலைமையில் அப்போதைய வட்டாரக்கல்வி அதிகாரியான செல்வி.ஆ.நு.யு. ஐசய புயரடன அம்மையாரினால் பாடசாலை 04.09.1959ல் திறந்துவைக்கப்பட்டது. எனினும் இக்காலப்பகுதியில் பாலர் பாடசாலைஇ மேற்பிரிவு பாடசாலை (1- 8வரை) என இயங்கி வந்த முறையினை மாற்ற வேண்டும் என ஊர் மக்கள் கேட்டுக் கொண்டமையினால் இப் பாடசாலை பாண்டிருப்பு அ.த.க. (அரசினர் தழிழ் கலவன் பாடசாலை) இணைந்துசெயற்பட்டது. இக்காலப்பகுதியில் திரு வீரசிங்கம் ஐயாஇ திரு.கேசப்பிள்ளை ஐயாஇ திருமதி. கேசப்பிள்ளை அம்மனிஇ திரு.இராசநாயகம்இ திரு.நவசிவாயம்இ திரு.கதிர்வேல்பிள்ளை ஐயா போன்றவர்கள் அரசினால் உதவி ஆசிரியர்களாகக் கடமையாற்றினார்கள்.
பின்னர் இவர்களின் உதவியுடன் பாடசாலையின் வகுப்புக்கள் உயர்த்தப்பட்டன. 1960ம் ஆண்டுகாலப்பகுதியில் அதிபர் திரு.k.இளையதம்பி அவர்களின் தலைமையில் பாடசாலையில் கஃபொஃதஃசாதாரணம் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக நடைபெற்றுவந்தது. 01.7.1965ல் திரு.ரு.நாகையா அவர்கள் அதிபராக பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் பெளதீக வசதிகள் போதுமானதாக காணப்பட்டமையினால் தற்காலிக வகுப்பறை 100X20 அமைக்கப்பட்டு மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் முன்கொண்டு செல்லப்பட்டது. இப்போதும் அக்கட்டிடம் அவர் பெயர் கொண்டதாகவே காணப்படுகின்றது.
அதன் பின்னர் திரு.K.R அருளையாஇ திரு.M சிவநாதப்பிள்ளைஇ திரு.P.G.காசிநாதன் (முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்) ஆகியோர் 1970-1972 வரை அதிபர்களாக கடமையாற்றியதுடன் பாடசாலையில் பல வேலைத்திட்டங்களும் சமய ஒழுக்க விழுமியங்களும் மாணவர்களிடையே மேன்பட்டுக் காணப்பட்ட காலப்பகுதிகளாகும். பின்னர் 15.1.1973 திரு.A நாகலிங்கம் (பண்டிதர்) அவர்கள் அதிபராக கடடையைப் பொறுப்பேற்று தமது பணியை சிறப்பாக நிறைவேற்றியதுடன் மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும் அவர்களது ஒழுக்கம்இ விளையாட்டுஇ ஆக்கத்திறன்இ பாடசாலையின் ஆசிரியர் வளம்இ பௌதீகவளம் என்பன மேன்பட்டதுடன் அப்போதைய கல்முனை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட அமைச்சருமான ஜனாப்.யA.R.M மன்சூர் அவர்களின் நிதியுதவியுடன் 100X20 நீளமான வகுப்பறை கட்டிடம் ஒன்றை பெற்றுக் கொண்டு மாணவர்களின் இடப்பிரச்சிணையை தீர்க்கக்கூடியவகையில் செயற்பட்டதுடன் அக்கட்டிடமானது அதிபர்.M. நாகலிங்கம் அவர்களின் தலைமையில் அப்போதைய வெளிவிவகார அமைச்சர் ஜனாப்.யA.C.S, ஹமித்இ யA.R.M மன்சூர் (பாராளுமன்ற உறுப்பினர்) ஆகியோரினால் 27.10.1978 திறந்துவைக்கப்பட்டது. அத்துடன் இவரது காலப்பகுதியிலேயே பாடசாலை கீதம் இவரால் இயற்றப்பட்டு திருமதி சிவரஞ்சனி ராமதாஸ் இசை அமைக்கப்பட்ட பாடசாலை கீதம் உருவாக்கப்பட்டது.
பின்னர் பாடசாலையின் வரலாற்றின் முக்கியகால கட்டமாகக் 1981-1990 வரையான காலம் குறிப்பிடதக்கதாகும்.5.06.1981 அன்று தொடக்கம் பாடசாலையின் அதிபராக திரு.S.பாக்கியநாதன்அவர்கள் பொறுப்பேற்றதன் பினனர் பாடசாலையின் சகல செயற்பாடுகளும் புதிய உத்வேகத்துடனும் ஒற்றுமையாகவும் அதிபர்இ ஆசிரியர்கள்இ மாணவர்கள்இ நலன்விரும்பிகள்இ பழையமாணவர்கள் என பலரது உழைப்பின் மூலம் 65 அடி நீளமான ஒலை கொட்டில் ஒன்று உருவாக்கப்பட்டதுடன் பாடசாலையின் மாணவர் தொகை அதிகரித்தது. சிறப்பான பெறுபேறுகள் வெளிவரத் தொடங்கின. அத்துடன் இவரது காலத்திலேயே பாடசாலைக்கென்று சிறிய விஞ்ஞான ஆய்வுகூடம் ஒன்றும் கிடைக்கப்பெற்றது. அத்துடன் அதிபரின் நேரடியான செயற்பாடுகள் மூலம் கற்றல்இ கற்பித்தல்இ இணைப்பாடவிதான செயற்பாடுகள்இ சுற்றுலாஇ சாரணியம் என பல செயற்பாடுகளிலும் பாடசாலை முன்னிலை பெற்றது.
பின்னர் 26.2.1990-1996 வரை அதிபராக இருந்த பிரபல கவிஞர் சண்முகம் சிவலிங்கம் எனப்பட்ட ஸ்ரீபன் சிவலிங்கம் அவர்களின் காலப்பகுதியில் நாட்டில் ஏற்ப்பட்ட யுத்த சூழல் காரணமாக பாடசாலையின் செயற்பாடுகள் ஒழுங்காக நடாத்தமுடியாத காலப்பகுதியாக இருந்த போதிலும் இவர் மாணவர்களின் கற்றல் மேன்பாட்டிக்காக் பல்வேறு செயற்பாடுகளையும் விடுமுறை காலஇ இரவு நேர வகுப்புக்களையும் ஒழுங்கு செய்து பல வழிகளில் செயற்பட்ட ஒருவராவர். இதுவரை காலமும் பாண்டிருப்பு இந்து மகாவித்தியாலயம் என அழைக்கப்பட்ட இவ் பாடசாலை பாண்டிருப்பு மகா வித்தியாலயம் என அழைக்கப்பட தொடங்கியது. அத்துடன் இவரது காலத்திலேயே பாடசாலை IC தரமுயர்த்தப்பட்டது.
பின்னர் 04.7.1997ல் அதிபராக E.இராசரெட்ணம் அவர்கள் பதவியேற்றுக் கொண்டார்கள். இவரது காலப்பகுதியில் பல்வேறு முன்னேற்றகரமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் கற்றல் பெறுபேறுகளும் அதிகரிக்கப்பட்டது. அத்துடன் 1998ல் அதிபரின் வழிகாட்டலுடன் ஆசிரியர் திரு.க.கோகிலராஜா அவர்களினால் பாடசாலைக்கான சின்னம் வடிவமைக்கப்பட்டதுடன் பாடசாலைக் கொடியும் உருவாக்கப்பட்டது. விஞ்ஞான பட்டதாரியான அதிபர் மாணவரின் கல்வி நடவடிக்கையில் அதிக அக்கறையுடன் செயற்ப்பட்ட அதிபராவார்.
பின்னர் 05.03.2004ல் பாடசாலையின் இரண்டாவது பெண் அதிபராக திருமதி A.பேரின்பராஜா அவர்கள் கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார். இவரது காலத்தில் தற்போதைய அதிபர் அறை உட்பட வகுப்பறைகளைக் கொண்ட மாடிக்கட்டிடம் ஒன்று கிடைத்துள்ளதுடன் பாடசாலைக்கான ஒலிபெருக்கி சாதனங்களும்இ நிலையான தொலைபேசி வசதிகளும்இ பேன்ட் வாத்திய குழுவினருக்கான உடையும் ஏனைய பொருட்களும் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன் பாடசாலைக்கான அடிப்படை தேவைகளும் பெறப்பட்டன. அத்துடன் மாணவர்களின் கற்றல்இ கற்பித்தல் செயற்பாடுகள் முன்னேற்றமடைந்ததுடன் நல்ல கற்றல் பெறுபேறுகளும் கிடைக்கப்பெற்றன. அதன்பின்னர் 19.6.2006ல் அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு.கோபாலப்பிள்ளை அவர்களின் காலப்பகுதியில் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் பாடசாலையின் உள்ளகப்பகுதியில் கூடைப்பந்தாட்ட மைதானம் அமைக்கப்பட்டமையும் பல்வேறு கற்றல் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன. பின்னர் 15.09.2008ல் அதிபராக கடமையேற்ற திரு.P.புண்ணியமூர்த்தி அவர்களின் காலப்பகுதியில் பாடசாலையில் ஒன்றுகூடல் மேடை அமைக்கப்பட்டதுடன் 12.03.2009ல் திரு.K.உதயகுமார் என்பவர் தனது அண்ணணான K.சாந்தகுமார் என்பவரது ஞாபகார்த்தமாக ஓர் கணணிக்கூடத்தை அமைத்து அன்பளிப்பு செய்தமையும் மேலும் பல கற்றல்இ கற்ப்பித்தல் பணிகளிலும் பாடசாலை சிறந்து விளங்கியது இவரது காலப்பகுதியிலுமாகும். அத்துடன் பல மாணவர்கள் சென்றமை குறிப்பிடதக்கதாகும்.
அதன் பின்னர் 25.05.2011 திரு.W.E.அருள்நேசன் என்பவர் அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் பாடசாலை பல்வேறு வழிகளிலும் முன்னேற்றமடைந்தது. அத்துடன் கூடைப்பந்தாட்ட பெண்கள் அணியினர் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியை பெற்றதுடன் பல மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கும்இ கல்வியியல் கல்லூரிக்கும் செல்ல கூடிய வகையில் கற்றல்இ கற்பித்தல் ஏனைய இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் பாடசாலை முன்னேற்றமடைந்திருந்த காலப்பகுதியாகும். அத்துடன் 2012ல் இவரது காலப்பகுதியிலேயே 1000 இடைநிலை பாடசாலை திட்டத்தில் இப் பாடசாலை உள்வாங்கப்பட்டு பல அபிவிருத்தி திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடதக்கதாகும். அத்துடன் இவரது காலத்திலேயே மகிந்தோதைய விஞ்ஞான ஆய்வுகூடம் திறந்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடதக்கதாகும்.
பின்னர் திரு.V.பாலசுப்பிரமணியம் அவர்கள் தற்காலிக அதிபராக 02 வருடங்கள் சேவையாற்றியதுடன் இவரது காலங்களில் மாணவர்கள் கற்றலிலும் இணைப்பாடவிதான செயற்பாட்டிலும் மிக திறமையாக செயற்பட்டதுடன் பல்வேறு போட்டி நிகழ்ச்சியிலும் வெற்றி பெற்றமை குறிப்பிடதக்கதாகும். அத்துடன் உயர்தர பிரிவு மாணவர்களுக்கான கற்பித்தலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இவர் பல மாணவர்களையும் கற்றலில் சிறந்த பெறுபேற்றை பெற்றுக்கொள்ள உறுதுணையாக இருந்தமை குறிப்பிடதக்கதாகும்.
பின்னர் 02.05.2017ல் பாடசாலைக்கு அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட தற்போதைய அதிபர் திரு.சி.புனிதன் அவர்களது காலப்பகுதியில் 1000 பாடசாலை திட்டத்தின் கீழ் ஆரம்பப் பிரிவு இல்லாது போனமையினால் குறைந்து காணப்பட்ட மாணவர் தொகை படிப்படியாக அதிகரிக்கப்பட்டதுடன் கல்வி மேன்பாடுகள்இ ஒழுக்கவிழுமியங்கள் வளர்ச்சியடைந்தமையும்இ பாடசாலை சூழல் சீர் செய்யப்பட்டு ஓர் ரம்மியமானதாக மாற்றியமைக்கப்பட்டதுடன் பாடசாலை சுற்று மதில் முழுமையாகக் பூர்த்தி செய்யப்பட்டதுடன் நீண்ட காலத்துக்கு பாடசாலை கல்வி அமைச்சின் உதவியுடன் புனரைமைப்பு செய்யப்பட்டது. மேலும் பழைய மாணவர்களின் மன்றம் புணரைமைப்பு செய்யப்பட்டு பல்வேறு வேலை திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் 1994ம் ஆண்டில் பாடசாலையில் கல்வி கற்ற மாணவர்கள் ஒன்று சேர்ந்து மாடிக்கட்டிடங்கள் இரண்டுக்கு வர்ணம் பூசி புது பொழிவு பெற செய்தமையும்இஆசிரியர் வளம் அதிகரிக்கப்பட்டதுடன் கற்பித்தல் செயற்பாடுகளும் சிறப்பாக அமைந்தது. பின்னேர வகுப்புக்களும்இ இரவு நேர வகுப்புக்களும் நடைபெற்று வருவதுடன் மாணவர்களின் கற்றலுக்கான தேவைகள் முழுமையாக நன்கொடைகள் மூலம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒன்று கூடல் மேடைக்கான கூறைஅமைக்கப்பட்டுள்ளதும்இ பல் ஊடக தொகுதி பாடசாலைக்காக வழங்கப்பட்டுள்ளதுடன் கற்றல்இ இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் உள்ளக வசதிகள் மேன்பாடு என்பனவும் சிறப்பாக காணப்படுவதுடன் பாடசாலையின் பாரம்பரியங்களும் சிறப்பாக பின்பற்றப்படுவதும் குறிப்பிட்டு கூறக்கூடியவையாகும்.
76 வருட கால வரலாற்றைக் கொண்ட இப் பாடசாலையானது இதுவரை காலமும் 20 அதிபர்களின் வழக்காட்டல்கள் மூலம் பல வகைகளில் முன்னேற்றமடைந்துள்ளது. அத்துடன் பல நூற்றுக்கனக்கான ஆசிரியர்களின் அர்பணிப்பான செயற்பாடுகளிலும் ஆயிரக்ககணக்கான மாணவர்களின் முயற்சியினாலும் பெற்றோர்கள்இ பழைய மாணவர்கள்இ நலன்விரும்பிகள் கல்வி அலுவலக அதிகாரிகள் போன்றோரின் அனுசரணையுடன் வளாச்சியடைந்துள்ள போதிலும் 2012 1000 பாடசாலை திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டமையாலும் ஆரம்பபிரிவு முற்றாக கைவிடப்பட்டமையினால் மாணவர் தொகை படிப்படியாக குறைவடைந்த நிலையில் தற்போதைய காலப்பகுதியில் படிப்படியாக பல வழிகளில் முன்னேற்றமடைந்து வருகின்றது. அத்துடன் எதிர்காலத்தில் இன்னும் பல காத்திரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் போது இப் பாடசாலை ஓர் 1A,B பாடசாலையாக மாற்றமடைய வேண்டும் என்பதை எதிர்கால நோக்காக கொண்டு செயற்பட வேண்டியுள்ளது.






