ஜெய ஜெய இந்துமகாவித்தியாலயமே
ஜெயமுடன் வாழியவாழியவே (2)
வாழ்கவாழ்கவாழியவே. (2)
பல்கலைஞானம் பயின்றிடும் சாலை
பாண்டிருப்பின் கலைச்சோலை
கல்வியின் நிலையம் கவின்பெறும் தீபம் (2)
கண்ணெனப்போற்றிடுவோம்.
ஜெய ஜெய இந்துமகாவித்தியாலயமே
ஜெயமுடன் வாழியவாழியவே (2)
வாழ்கவாழ்கவாழியவே. (2)
அன்பறம் ஓங்கஅருளொளிஓங்க
ஆன்மீகஞானமும் ஓங்க - இன்புறு
செந்தமிழ் இயல், இசை,நாடகம்
எண் அறுங் கலைகளும் ஓங்க.
வீரமும் ஞானமும் செல்வமும் ஓங்க
வெற்றியுடன் புகழ் ஓங்க
திறமிகுஎங்கள் கல்வியின் நிலையம்
திக்கனைத்தும் பெயர் ஓங்க (2)
ஜெய ஜெய இந்துமகாவித்தியாலயமே
ஜெயமுடன் வாழியவாழியவே (2)
வாழ்கவாழ்கவாழியவே. (2)
ஆக்கம்: பண்டிதர்.எம்.நாகலிங்கம்
இசையமைப்பு: திருமதி. சிவரஞ்சனிராம்தாசன்.