இன்றைய சிறுவர்களை நாளைய தலைவர்கள் ஆக்கும் மிகச் சிறந்த நிறுவனம் பாடசாலை ஆகும்.
சாதனைகள்
2022(2023) க.பொ.த (சா/தர) பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசளிப்பு வைபவம்
2022(2023) க.பொ.த (சா/தர) பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் வகையில் இன்று
(11.12.2023 - திங்கள்) பாடசாலை அதிபர் திரு.T.வில்வராஜா தலைமையில் பரிசளிப்பு வைபவம் இடம்பெற்றது. இதன் போது பிரதம அதிதியாக திரு.P.குணராசா (உரிமையாளர் - காயத்திரி ஸ்டோர்ஸ், பாண்டிருப்பு) கலந்து சிறப்பித்ததோடு, க.பொ.த (சா/தர) பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசுப் பொருட்களையும், பாடசாலை மாணவர்களுக்கு தேவையான ஒரு தொகுதி பயிற்சிக் கொப்பிகளையும் அன்பளிப்பாக வழங்கியிருந்தார். இவ்வாறு எமது பாடசாலையின் வளர்ச்சிக்காக பல வழிகளிலும் உதவி வழங்கிக் கொண்டிருக்கும் திரு.P.குணராசா அவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.






